பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

3 months ago 22

சென்னை,

சேலம் ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 18190) நாளை(வியாழக்கிழமை) மற்றும் 5, 7-ந்தேதிகளில் போத்தனூர், கோவை, திருப்பூர் வழியாக இயக்கப்படும். கோவை-ஈரோடு இடையே 50 நிமிடங்களுக்கு ரெயில் மாற்றியமைக்கப்படும்.

ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) நாளை மற்றும் 5, 7-ந்தேதிகளில் சேலம் கோட்டத்தில் 45 நிமிடங்களுக்கு மாற்றியமைக்கப்படும். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி ஜி.மரியாமைக்கேல் தெரிவித்துள்ளார்.

Read Entire Article