பரஸ்பரம் சம்மதத்தின்பேரில் விவாகரத்து, அரசியல் சண்டையில் தமது பெயரை இழுக்க வேண்டாம்: நடிகை சமந்தா

3 months ago 23
நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமா ராவ் தான் காரணம் என்று தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்த கருத்து தெலங்கு திரையுலகில் புயலை கிளப்பி உள்ளது. கே.டி. ராமா ராவ் கொடுத்த தொல்லையால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலங்கு சினிமாவை விட்டே போய்விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.   தம்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள கே.டி. ராமா ராவ், 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையெனில் அமைச்சர் சுரேகா மீது மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அமைச்சர் கொண்டா சுரேகா தமது பேச்சை திரும்பப் பெற வேண்டும் என்று நாக சைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா கேட்டுக்கொண்டார். பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து செய்து கொண்டதாகவும், அரசியல் சண்டையில் இருந்து தமது பெயரை இழுக்க வேண்டாம் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
Read Entire Article