பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சிறப்பிடம்

5 days ago 2

பரமத்திவேலூர், மே 16: நாமக்கல் மாவட்டம், பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைகளை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் சசிதரன் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவி டான்யா 500க்கு 487 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம், மாணவி மௌனிஷா 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர் நதின், 500க்கு 475 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சுவேஷ்லா 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடமும், மாணவர் முகமது ஹர்சத் 500க்கு 452 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் வகிக்கின்றார். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளியின் செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜூ, பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜ், இயக்குநர்கள், ஆசிரியர்கள் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

The post பரமத்தி மலர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சிறப்பிடம் appeared first on Dinakaran.

Read Entire Article