பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது - செல்வப்பெருந்தகை

3 hours ago 2

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் போலீஸ் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த சூழலில் இன்று (திங்கட்கிழமை) போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை த.வெ.க தலைவர் விஜய் இன்று சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் பரந்தூர் செல்லும் விஜய்யால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவர் விஜயால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரையாக கூறலாம் .நானும் மூன்றரை வருடங்களாக பரந்தூர் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Read Entire Article