
மாஸ்கோ,
பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலும் குறித்து சர்வதேச நாடுக ளுக்கு தெளிவாக விளக்கு வதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களை உள்ளடக்கிய 7 குழுக்கள் உருவாக்கப் பட்டன. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளு மன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் ஒரு எம்.பி.க்கள் குழுவினர் ரஷ்யா சென்றனர்.
மாஸ்கோ நகரில் ரஷிய கூட்ட மைப்பின் துணை வெளி யுறவு அமைச்சர் ஆண்ட்ரே குடென்னை கோவை இந்திய எம்.பி.க்கள் குழுவி னர் சந்தித்து பேசினர். மேலும், லிபரல் ஜனநாயகக் கட்சி யின் கீழ் செயல்படும் சபை, சர்வதேச விவகாரக் குழுவின் தலைவர் லியோனிட் ஸ்லட்ஸ்கி தலைமையிலான ரஷ்ய எம்.பி.க்கள் அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடன் வட்ட மேசைக் கூட்டத்தில் கனி மொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான எம்.பி. க்கள் குழு வினர் விரிவாக ஆலோசனை மேற்கொண்ட னர். அந்த சந்திப்பின் போது, பகல்காம் தாக்குதல் குறித்தும், ஆபரேஷன்சிந்தூர் குறித்தும் இந்திய எம்.பி.க்கள் குழுவினர் விரிவாக விளக்கங்களை அளித்தனர்.
இது குறித்து, கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளி யிட்டுள்ள எக்ஸ்தள பதி வில், ''அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் தோற் கடிப்பதற்கான இந்தியாவின் தெளிவான மற்றும் நிபந்த னையற்ற உறுதியையும், அதை ஒழிப்பதற்கான நமது சமரசமற்ற நிலைப்பாட்டை யும் தேசிய உறுதியையும் வலி யுறுத்தி, சர்வதேச விவகா ரங்களுக்கான ரஷ்ய எம்.பி.க்கள் குழுவின் தலைவர் லியோ னிட் ஸ்லட்ஸ்கி மற்றும் உறுப்பினர்களிடம் இந்தியா வின் அனைத்துலக கட்சி நாடாளுமன்றக் குழு விளக்கம் கூறியது'' என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா வெளி யிட்டுள்ள அறிக்கை யில், பயங்கரவா தத்தை அதன் அனைத்து வடிவங் களிலும் வெளிப்பா டுகளிலும் ஒழிப்ப தற்காக ரஷ்யா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று தெரிவித்து உள்ளது. மாஸ்கோவில் செய்தி யாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி. ''இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து பல தவறான தகவல்கள் பரப் பப்பட்டு வருகின்றன. அதோடு பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்றும், அது அணு ஆயுதங்களை கொண்டிருக்கி றது என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் உண் மையை வெளிப்ப டுத்தவும், உண்மையில் நடந்ததை தெளிவுப்ப டுத்தவும் விரும்பினோம்.
மேலும் அணு ஆயுதத்தை காட்டி இந்தியாவை அச்சு றுத்த முடியாது என்பதையும் நாங்கள் தெளிவாக கூற விரும்பினோம். இந்தியா எப்போதும் ஒருமைப்பாட் டிற்காகவும், நேர்மைக்கா கவும், அமைதிக்காகவும் தொடர்ந்து போராடும். தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து நிற்போம்'' என்று கூறினார்.