பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

2 hours ago 2

பப்புவா: பப்புவா நியூ கினியாவில் காலை 10.58 மணியளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 81 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 81 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், அருகிலுள்ள நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

 

The post பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு! appeared first on Dinakaran.

Read Entire Article