பனையஞ்சேரி ஊராட்சியில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

5 days ago 2

பெரியபாளையம், மே 16: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பெரியபாளையம் அடுத்த பனையஞ்சேரி ஊராட்சியில் திமுக அரசின் 4 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளருமான பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார். ரமேஷ், கலைச்செல்வன், ஆனந்தன் ஆகியோர் வரவேற்றனர். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளான பகலவன், உமா மகேஸ்வரி, ரமேஷ், சத்தியவேலு, ராமமூர்த்தி, குணசேகரன், லோகேஷ், தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ரவிக்குமார், சித்ரா முனுசாமி, ஜெயலலிதா சசிதரன், தனசேகரன், சம்பத், சங்கர், ரவிச்சந்திரன், சிவாஜி, டில்லிசங்கர், ஜமுனா அப்புனு, டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினரும் எம்எல்ஏவுமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் பங்கேற்று, திமுக அரசின் 4 ஆண்டு கால பல்வேறு சாதனை திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். பின்னர், 1000 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் தலைமை பேச்சாளர்கள் நன்னிலம் சந்திரசேகர், பாலச்சந்திரன், கன்னிகை ஸ்டாலின், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், முத்து, நாகராஜ், பாபு, மதி, செல்வம், மோகன், மாரி, திருநாவுக்கரசு, விஜயன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பனையஞ்சேரி ஊராட்சியில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Read Entire Article