பனீர் வெள்ளை மிளகு குழம்பு

3 months ago 21

தேவையானவை:

பனீர் – 200 கிராம்,
சின்ன வெங்காயம் – அரை கப்,
பூண்டு – கால் கப்,
தக்காளி – 3,
புளி – எலுமிச்சை அளவு,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிது.

அரைக்க:

வெள்ளை மிளகு – ஒன்றரை டீஸ்பூன்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
பூண்டு – 5 பல்,
தேங்காய்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – 6,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு -அரை டீஸ்பூன்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – அரை கப்.

செய்முறை:

பனீரை துண்டுகளாக்குங்கள். பூண்டு, வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாகநறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து அரையுங்கள். புளியை இரண்டரைகப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.எண்ணெயை காயவைத்து, கடுகு, வெந்தயம் தாளித்து, பூண்டு, வெங்காயத்தை சேருங்கள். இதுநன்கு வதங்கியதும் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகக்கொதிக்கவிட்டு இறக்கி, கறிவேப்பிலை கறிவேப்பிலை சேருங்கள்.

 

The post பனீர் வெள்ளை மிளகு குழம்பு appeared first on Dinakaran.

Read Entire Article