பத்ம விருது வென்றவர்களுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா

1 week ago 4

சென்னை,

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ந்தேதி அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரியவிருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தை சேர்ந்த 13 பேருக்கும், கிண்டி கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வான நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் கவர்னரின் பாராட்டு விழாவில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு வருவதால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் அதேபோல் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

 

Read Entire Article