சென்னை: பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் அதிமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்; பேரறிஞர் அண்ணா கூறிய படி மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று எண்ணத்தில் அரசியலுக்கு வந்தவன் நான். எனக்கு எந்தவித தனிப்பட்ட கருத்தும் நிலைப்பாடும் கிடையாது.
ஜாதி, மத வேறுபாடு இன்றி தமிழனாக, இந்தியனாக, இயல்பாகவே வாழ்ந்து வருபவன் வருபவன் நான். என்னை நம்பாமல் கெட்டவர்கள் இருக்கலாம், ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை; பதவிக்காகவோ, புகழுக்காகவோ வந்தவன் அல்ல நான்” மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் அதிமுக; ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் நான் இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பேன். ஆண்டவனை துணையாக கொண்டவர்களை யாரும் அழிக்க முடியாது என்று நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மக்களின் பன்முக தன்மையை ஏற்று கொண்டு செயல்படும். அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித் தன்மையை நாங்கள் மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம், பாதுகாக்கிறோம்” என்று கூறினார்.
The post பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ நான் அரசியலுக்கு வரவில்லை: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.