
இஸ்லமபாத்,
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் எல்லையோரபகுதிகளில் உள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டும் இன்றி முக்கியமான இடங்களை குறிவைத்து டிரோன்களையும் பாகிஸ்தான் ஏவி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்தியா, தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதால் எல்லையில் போர்மேகம் சூழ்ந்துள்ளது.
அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளும் மோதிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவிடம் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தர் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.
அப்போது, இந்தியா தாக்குதலை தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க தயார் எனவும் இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று பேசியுள்ளார். மேலும், நாங்கள் பொறுமையை இழந்ததால்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.