பண்ருட்டி அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

3 hours ago 3

 

பண்ருட்டி, மார்ச் 19: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மருங்கூர் நெல்லடிக்குப்பம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் சுனில் குமார்(25). இவரது தங்கை காவியா (22) என்பவரை மருங்கூரை சேர்ந்த ஜெகன் (26) எனபவரது தம்பி கலைச்செல்வன் என்பவர், அவரது வீட்டுக்கு தெரியாமல் அழைத்துக் கொண்டு சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்தன்று சுனில்குமாரை, ஜெகன் போனில் அசிங்கமாக திட்டியுள்ளார். பின்னர் ஜெகன் (26), கலையரசன், முரசு என்கின்ற தமிழ் முரசு (19), தேவா ஆகியோர் சுனில் குமார் வீட்டிற்கு சென்று அசிங்கமாக திட்டி கை மற்றும் தடியால் அடித்து தாக்கி, கத்தியால் தலையில் வெட்டினர். எங்களிடம் வைத்துக் கொண்டால் கொலை செய்து விடுவோம் என்றுகொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்த சுனில் குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் அளித்த புகாரின்பேரில், 4 பேர் மீது காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், முத்தாண்டிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அதில் ஜெகன், தமிழ்முரசு ஆகியோரை கைது செய்தனர்.

The post பண்ருட்டி அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article