பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.49, வெங்காயம் ரூ.40 விற்பனை : பொது மக்கள் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை!!

3 months ago 21

சென்னை : சென்னையில் கூட்டுறவு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி கிலோ ரூ.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் முறையாக 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளன. தமிழகத்தின் தக்காளி தேவையை இவ்விரு மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. கடந்த ஒரு வாரமாக தக்காளி வரத்து குறைந்து வந்த நிலையில், அதன் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.33-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டிவிட்டது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.இதேபோல் வெங்காயத்தின் விலையும் கணிசமாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், பொது மக்கள் நலன் கருதி கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.49-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டிலுள்ள பிற பகுதிகளிலும் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறுகிய காலத்துக்குள் தக்காளி, வெங்காய விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி ரூ.49, வெங்காயம் ரூ.40 விற்பனை : பொது மக்கள் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article