பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

6 months ago 17

நாசரேத், நவ.12: நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி – பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ – மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் வித்யாதரன் வரவேற்றார். பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மனும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான ஜனகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மொத்தம் 235 பேர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டன. கணேசர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர் வாழ்த்திப் பேசினார். இதில் கணேசர் கல்வி அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊர் பெரியவர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஜெசுதாசன் நன்றி கூறினார்.

The post பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article