பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை

3 months ago 22

மதுரை: விருதுநகர் மாவட்டம், காசிரெட்டிபட்டியை சேர்ந்த விஜய் (எ) பீமாராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடந்த 2021, பிப்ரவரி மாதம் விருதுநகர் மாவட்டம் அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் மற்றும் தீக்காயத்துக்கு ஏற்ப இழப்பீடு வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு, ‘‘பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு, அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பான செய்திகளை பார்க்க முடிகிறது. இதற்கு பாதுகாப்பு வசதிகள் மற்றும் கண்காணிப்பு இல்லாததே காரணம். தொடர்ந்து, உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனுதாரர் பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம். உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்பவும், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் உள்ளது’ எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை appeared first on Dinakaran.

Read Entire Article