பட்டாசு பலி 10 ஆக உயர்வு

8 hours ago 3

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் கமல்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 1ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், 8 பேர் உடல் கருகி பலியாகினர். விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி, இரு தினங்களுக்கு முன்னர் இறந்தார். இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகுராஜா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

The post பட்டாசு பலி 10 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article