பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்

2 weeks ago 4

திருமலை: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் யாதாத்ரி மாவட்டம் மோட்டகொண்டூர் அடுத்த கேட்டபள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் அதேபகுதியை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஷிப்ட் முறையில் வேலை செய்கின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 8 தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் ரசாயனம் கலக்கும் பகுதியில் கேட்டபள்ளியை சேர்ந்த சந்தீப் (30), மோட்டகொண்டூரை சேர்ந்த தேவிசரண் (20), ஆத்மகூரை சேர்ந்த நரேஷ் (30) உள்ளிட்டோர் பணியில் இருந்தனர். அப்போது எதிர்பாராமல் ரசாயனம் கலக்கும்போது பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சந்தீப், தேவிசரண், நரேஷ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து ேபாலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து சடலங்களை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களுக்கு `108’ ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். பட்டாசு ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக கூறி திடீர் தர்ணா நடத்தினர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article