படம் வெற்றியடைய காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த '3 பிஎச்கே' படக்குழுவினர்

18 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சித்தார், சரத்குமார் இணைந்து நடித்துள்ள படம் '3 பிஎச்கே'.இந்த படத்தை '8 தோட்டாக்கள், குருதி ஆட்டம்' போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ளார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மீதா ரகுநாத், சைத்ரா மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களுக்கென சொந்தமாக ஒரு 3 பிஎச்கே வீடு வாங்க ஆசைப்படும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் நாளை (4ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், '3 பிஎச்கே' படம் வெற்றிபெற வேண்டி பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் சரத்குமார், தேவயானி, சித்தார்த் உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்தனர்.

 

Read Entire Article