பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக் கொலை...பீகாரில் பரபரப்பு

2 weeks ago 4

லக்கிசராய்,

பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் இன்று அதிகாலை பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பஞ்சாயத்துத் தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார், கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு இன்று அதிகாலை திரும்பி இருக்கிறார்கள். அப்போது 1.30 மணியளவில் ஆயுதமேந்திய சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர்.

உடனடியாக தகவலரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்திருக்கும் போலீசார், அதன் அடிப்படையில் விசாரணையை துவங்கி இருக்கின்றனர். கொலைக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Entire Article