பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்

1 month ago 7

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், சேத்தக் 35 வரிசையில், புதிய பஜாஜ் சேத்தக் 3503 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. சேத்தக் 3501, 3502 ஸ்கூட்டர்களின் விலை கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் 3503 ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு அப்போது வெளியாகவில்லை. இந்நிலையில், 3503 ஸ்கூட்டரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. முந்தைய 35 வரிசை ஸ்கூட்டர்களில் இருந்த 3.5 கிலோவாட் அவர் பேட்டரி தான் இதிலும் இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 151 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். அதிகபட்சமாக மணிக்கு 63 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

3501, 3502 ஸ்கூட்டர்களில் இதே பேட்டரி இடம் பெற்றிருந்தாலும் அதிகபட்சமாக 153 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகமும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹில் ஹோல்டு அசிஸ்ட், வண்ண எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, மியூகிக் கன்ட்ரோல், போன் அழைப்புகளை பார்த்துக் கொள்ளும் வசதி, எக்கோ, ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோட்கள் உள்ளன. டிஸ்க் பிரேக் இடம் பெறவில்லை. 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும். சில வசதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் இதன் ஷோரூம் விலை சுமார் ரூ. 1,09,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சேத்தக் 35 வரிசை ஸ்கூட்டர்களில் குறைந்த விலையில் உள்ள ஸ்கூட்டர் இதுதான். ஷோரூம் விலையாக 3501 சுமார் ரூ.1,29,742 எனவும், 3502 சுமார் ரூ.1,22,499 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Read Entire Article