சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பசுவபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாமினை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் 2222 வாக்குச்சாவடி மையங்களில் கடந்த வாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து படிவங்களை பெறவும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையதள முகவரியிலும், வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் தங்களுக்கு தேவையான சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இம்முகாமில் தகுதியான வாக்காளர்களும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெறலாம். அதனைத் தொடர்ந்து, நேற்று சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பசுவபாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்த முகாமினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார் சக்திவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post பசுவபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.