
சென்னை,
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் வரும் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அமைகிறது.
இதையொட்டி பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வரும் 10,11,12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.