பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார்

2 weeks ago 4

பெரம்பூர்: பெரவள்ளூர் லட்சுமணன் நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (50). இவர், அதிமுகவில் ஓபிஎஸ் அணி வடசென்னை மத்திய மாவட்ட செயலாளராக உள்ளார். இந்த கட்சியில் ராயபுரம் சட்டமன்ற தொகுதி பகுதி செயலாளராக அறிவழகன் என்பவரை கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி குறித்து அறிவழகன் தொடர்ந்து கட்சிக்காரர்களிடம் அவதூறாக பேசி வந்த காரணத்தினால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை அந்த பொறுப்பில் இருந்து கிருஷ்ணமூர்த்தி நீக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகன், இரவு நேரங்களில் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் காவல்துறை வட்டாரத்திலும் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் நேற்று திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பகுதி செயலாளரை நீக்கியதால் இரவில் போன் செய்து ஆபாசமாக திட்டுகிறார்: ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article