நோய் தீர்க்கும் பழங்கள்

1 day ago 4

நன்றி குங்குமம் தோழி

பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன் வாழலாம்.

அத்திப்பழம்: உடலுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். ரத்தம் விருத்தியாகும். பித்த சூட்டை அகற்றும் வல்லமை உடையது.

அன்னாசிபழம்: ஜீரண சக்தியை உண்டாக்கும். இதய கோளாறுக்கு சிறந்தது. வாந்தி, வயிற்றுக் கடுப்பு, தொண்டைப்புண் ஆகியவைகளுக்கு சிறந்தது.

இலந்தைப்பழம்: வாந்தியை கட்டுப்படுத்தும். பசியை உண்டாக்கும். குடலை சுத்தப்படுத்தும். உடல் சூட்டை தணிக்கும்.

கொய்யாப்பழம்: மலச்சிக்கலைப் போக்கும். நல்ல பசி உண்டாக்கும். தொடர்ந்த விக்கலை நிறுத்தும்.

சீத்தாப்பழம்: உடலுக்கு வலிமையை கொடுக்கும். இதயத்திற்கு பலம் அளிக்க வல்லது.

நாவல்பழம்: பசியை உண்டாக்கும்.சிறுநீர் பெருக்கும். நீரிழிவு, வாய்வு ஆகியவற்றை போக்கும். உடலை வலிமைப்படுத்தும்.

பப்பாளிப்பழம்: மலச்சிக்கலைப் போக்கும். உடலை வெப்பமடைய செய்யும். குடலில் ஏற்படும் உபாதைகளை போக்கும்.

பேரீச்சம் பழம்: பித்தம், வாந்தி இவைகளுக்கு மருந்தாக அமையும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வலிமையை கொடுக்கும்.

மாதுளம்பழம்: பித்தத்தைப் போக்கும். மலச்சிக்கலை அகற்றும். மூளைக்கும், பல்லுக்கும் உறுதியைக் கொடுக்கும். வயிற்றுக் கடுப்பு, ரத்த பேதிக்கு சிறந்த மருந்தாக அமையும்.

விளாம்பழம்: பித்தம், சொறி, சிரங்கு, வாய்ப்புண், தொண்டை நோய் போன்றவற்றைப் போக்கும். உடலுக்கு வலிமையை சேர்க்கும்.

சப்போட்டா பழம்: புத்துணர்ச்சியும், உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.

வெள்ளரிப்பழம்: வயிற்றுப் புண், வயிற்று உப்புசம், குடற்புண் முதலிய நோய்களுக்கு நல்ல மருந்தாக அமையும். தாகத்தை தீர்க்கும். சூடு தணியும். களைப்பு நீங்கும். வயிற்றில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

தர்பூசணிப்பழம்: குளிர்ச்சியை அளிக்கும். தாகத்தை தணிக்கும். புத்துணர்ச்சியை உடம்புக்கு தரும்.

முலாம் பழம்: மலச்சிக்கல், சீதபேதி, கீழ் வாதம், கல்லீரல் வீக்கம், சிறுநீர் அடைப்பு, மேக நோய் முதலியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

ஆரஞ்சுப்பழம்: கண் நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா, குடற்புண், அஜீரணம், பல்நோய், சொறி நோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாகும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். பழங்களை உண்போம். நோயின்றி வாழ்வோம்.

தொகுப்பு: அ.சித்ரா, காஞ்சிபுரம்.

The post நோய் தீர்க்கும் பழங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article