சென்னை,
தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் யாமி கவுதம். தமிழில் கவுரவம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான இவர் தொடர்ந்து ஜெய்யுடன் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்திலும் நடித்து இருந்தார்.
தற்போது இந்தியில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக "ஆர்டிகள் 370' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அவர் நடித்துள்ள படம் 'தூம் தாம்'. ரிஷப் சேத் இயக்கத்தில் ஜோதி தேஷ்பாண்டே, ஆதித்யா தார், லோகேஷ் தார், புனித் வாடன் மற்றும் பலர் தயாரித்துள்ள இப்படத்திற்கு கேசவ் தார் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு அடுத்த மாதம் 14-ம்தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.