நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 151 பேர் பலி

2 months ago 24

காத்மண்டு,

நேபாளத்தில் சில நாட்களாக வரலாறு காணாத வகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் சிக்கி 151 பேர் வரை பலியாகி உள்ளனர். 56 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, 3 நாட்கள் பள்ளிகள் மூடப்படுகின்றன என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த வெள்ளி கிழமையில் இருந்து கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் 37 பேர் வரை பலியாகி உள்ளனர். 40 முதல் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளம் ஆனது, பாதிப்பு ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் நேபாளத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்து உள்ளன. மீட்பு பணிகளுக்காக 20 ஆயிரத்திற்கும் கூடுதலான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். இதுவரை 3,626 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Read Entire Article