'நேசிப்பாயா' படத்தின் 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

2 months ago 14

சென்னை,

2003-ம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான 'குறும்பு' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார் விஷ்ணுவர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் 'அறிந்தும் அறியாமலும், பட்டியல்' போன்ற வெற்றி படங்களை இயக்கினார். அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.

பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் 'தொலஞ்ச மனசு' எனும் முதல் பாடல் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து 'சோலோ வயலின்' எனும் இரண்டாவது பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என படக் குழு புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Read Entire Article