நெல்லையில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து தென்காசி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை

2 hours ago 2

*அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உறுதி

தென்காசி : நெல்லை செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து தென்காசி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார்.தென்காசியில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழா நடந்தது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ராணி ஸ்ரீகுமார் எம்பி, எம்எல்ஏக்கள் பழனி நாடார், ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்றார். இணைப்பதிவாளரும், செயலாட்சியருமான உமாமகேஸ்வரி சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பூர்விசா உறுதிமொழி வாசித்தார்.

விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று சிறந்த சங்கங்களுக்கான கேடயம் மற்றும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்,தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த 5 சவரனுக்குட்பட்ட பொது நகைக்கடன்கள் தள்ளுபடி மூலம் 28,420 குடும்பங்கள் ரூ.136 கோடி அளவில் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி மூலம் தென்காசி மாவட்டத்தில் 1,637 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 15,815 மகளிர் உறுப்பினர்கள் ரூ.48.47 கோடி அளவில் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வீதம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 13 ஆயிரத்து 49 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.31.30 கோடி வெள்ள நிவாரணம் கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 2023-2024ம் ஆண்டில் 29,693 விவசாயிகளுக்கு ரூ.303.44 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 9,116 விவசாயிகளுக்கு ரூ.104 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டுறவு வங்கி தற்போது நெல்லையில் செயல்பட்டு வருகிறது. அதனை பிரித்து தென்காசி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் போது உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான புதிய கூட்டுறவு சங்கத்தையும், கொரோனா தொற்று மூலம் உயிரிழந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையையும், 3,103 பயனாளிகளுக்கு ரூ.31.71 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் தொகைக்கான காசோலைகளையும், வருவாய்த்துறையின் மூலம் ஆயிரத்து 72 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன்.

ஆர்டிஓ லாவண்யா, தாசில்தார் ராம்குமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய், துணைத்தலைவர் முத்தையா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, ஷேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர் செங்கோட்டை ரஹீம், நகர்மன்ற துணைத் தலைவர் சுப்பையா, சமீம் இப்ராகிம், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ஜெயக்குமார், திவான் ஒலி, ரவிசங்கர், சுரேஷ், நகர செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், வெங்கடேசன், கணேசன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, குற்றாலம் குட்டி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் முருகன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, ரமேஷ், துணை அமைப்பாளர்கள் அப்துல் ரஹீம், கரிசல் வேலுச்சாமி, ஐவேந்திரன், சுப்பிரமணியன், சுரேஷ், அண்ணாமலை உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு சங்க செயலாட்சியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

The post நெல்லையில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கியை பிரித்து தென்காசி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article