நெல்லை: நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு நாகர்கோவில் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியது. பாளையங்கோட்டை டக்கம்மாள்புரம் பகுதியில் ஆம்னி பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 35 பேர் காயம் அடைந்தார். விபத்தில் காயமடைந்த பயணிகள் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் நெல்லை மாவட்டம் கூட்டப்புளியை சேர்ந்த பிரிஸ்கோ என்பவர் உயிரிழந்தார். ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு: 35 பேர் காயம் appeared first on Dinakaran.