நெல்லை நீதிமன்ற வாயிலில் இளைஞர் வெட்டிக் கொலை.. தப்பியவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு..

4 weeks ago 6
நெல்லையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த இளைஞர் நீதிமன்ற வாயிலிலேயே வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே இருந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒருவரை விரட்டி வந்து வாசலில் அரிவாளால் முகம் கை தலை பகுதிகளில் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான், தப்பி ஓடிய நபர்களை துரத்தி சென்று ஒருவனை பிடித்தார். இதைத்தொடர்ந்து 2 மணி நேரத்தில்யே மேலும் இருவரை கைது செய்தனர். நீதிமன்றம் முன்பு கொலை நடந்ததால் அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளர் ரூபேஷ் குமார் மீனா ஆய்வு செய்தார். விசாரணையில் கொலையான நபர் மாயாண்டி என்பதும், இவர் மீது கீழநத்தம் வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Read Entire Article