நெல்லை: சமாதானபுரம் பகுதிகளில் நாளை மின்தடை

12 hours ago 3

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் (பொறுப்பு) செயற்பொறியாளர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சமாதானபுரம் துணை மின் நிலையம், முருகன்குறிச்சி மின் பாதையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளதால் பாளை மகளிர் காவல் நிலையம் முதல் முருகன்குறிச்சி சிக்னல் வரை, திருச்செந்தூர் சாலை பாளை மார்க்கெட், மூளிகுளம், தெற்குபஜார் கோபாலசாமி கோவில் பகுதிகள், சிவன் கோவில் பகுதிகள், ஆயிரத்தம்மன் கோவில் பகுதிகள், சங்கிலி ஆண்டவர் கோவில் பகுதிகள், பட்டு பிள்ளையார் கோவில் பகுதிகள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை 3.5.2025 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் பாதுகாப்பு கருதி நிறுத்தி வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article