நெல்லை : பணகுடி அருகே வேன் கவிழ்ந்ததில் ஆக்ஸிஜன் காலி சிலிண்டர்கள் சாலையில் சிதறியது. நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் 25 காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வேன் பாளையங்ேகாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
பணகுடி அருகே கலந்தபனை பகுதியில் வரும்போது திடீரென வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் வேனிலிருந்த 25 ஆக்ஸிஜன் காலி சிலிண்டர்கள் சாலையில் சிதறியது.
இதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றிய தப்பிய நாகர்கோவிலை சேர்ந்த டிரைவர் சுரேஷ் மற்றும் கிளீனர் ஆகியோர் மாற்று வேனை வரவழைத்து அதில் ஆக்ஸிஜன் காலி சிலிண்டர்களை ஏற்றி பாளை நோக்கி சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நெல்லை அருகே வேன் கவிழ்ந்ததில் ஆக்ஸிஜன் காலி சிலிண்டர்கள் சாலையில் சிதறியது appeared first on Dinakaran.