நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைத்துப்பாக்கி திருட்டு... கைத்துப்பாக்கி, தோட்டாக்களை திருடிய 6 பேர் கைது

4 weeks ago 6
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் கைதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய மதுரையைச் சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சமூகரங்கபுரத்தைச் சேர்ந்த அழகு என்பவர் தனது பாதுகாப்பிற்காக அரசு அனுமதி பெற்று வைத்திருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருடு போனது குறித்து புகார் அளித்திருந்தார். தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுரையை சேர்ந்த ஆறு பேரை கைது செய்துள்ளனர். முதியோர்கள் மட்டும் வசிக்கும் வீடுகளை குறி வைத்து திருடும் இந்த கும்பல் அழகு வீட்டில் அவரது பெற்றோர் மட்டுமே இருப்பதால் திருட புகுந்த போது பீரோவில் இருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகளை களவாடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
Read Entire Article