நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பகுதியில் இஐடி பாரி சக்கரை ஆலை இயங்கி வருகிறது. நெல்லிக்குப்பம் மற்றும் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும் கரும்பை அறுவடை காலத்தில் இந்த ஆலைக்கு அரவைக்கு கொண்டு வருவது வழக்கம். இந்த ஆலையில், ஆண்டுக்கு 10 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது.
ஆனால் தற்போது இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தற்போது கரும்பு அரவையின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் பதிவு இல்லாத வெளி மாவட்ட கரும்பை அதிக விலை கொடுத்து வாங்கி அரவை செய்தனர்.
தற்போது பதிவில்லாத கரும்பும் அரவைக்கு வரவில்லை. தற்போது அதிக கரும்பு இல்லாததால் சர்க்கரை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் இருந்து சரக்கு ரயில் வேகன்கள் மூலம் 2600 டன் சர்க்கரை மூட்டைகள் வந்தது. இந்த சர்க்கரை மூட்டைகளை லாரிகள் மூலம் ஆலைக்கு கொண்டு சென்றனர்.
The post நெல்லிக்குப்பம் ஆலைக்கு ரயில் மூலம் 2600 டன் சர்க்கரை மூட்டைகள் கர்நாடகாவில் இருந்து இறக்குமதி appeared first on Dinakaran.