கரூர், பிப். 6: கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், வாங்கல், சோமூர், ரெங்கநாதன்பேட்டை, புதுப்பாளையம்இ திருமுக்கூடலு£ர் ஆகிய பகுதிகள் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளாக உள்ளன. மேலும் கரூர் நகரின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆறும் திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து கொண்டு திருச்சி நோக்கி ஒரு மித்த காவிரியாக பயணிக்கிறது. கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் பல ஆண்டுகளாக கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த கோரை பயிர் சாகுபடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த காவிரி ஆற்றங்கரையை ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கோரை பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுக்கு இரண்டு முறை இந்த பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு முறை பயிரிடப்படும் கோரை ஆறு மாதங்களுக்கு பிறகு விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஆறு மாத விளைச்சலுக்கு பிறகு அதனை அறுத்துஇ கோரைகளை கைப்பிடியாக பிடித்து ஒரு கட்டு என்ற அடிப்படையில் வைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஆறு கட்டுகளை ஒன்றாக இணைத்து பெரிய கட்டாக மாற்றி அதனை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பாய் தயாரிப்புக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கோரை பயிர் உள்ளது. இதன் காரணமாக இதனை விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கிச் செல்லும் வகையில் வியாபாரிகள் இந்த பகுதியில முகாமிட்டு மொத்தமாக விவசாயிகளிடம் வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக கரூர் மாவட்டம் நெரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கோரை பயிர் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது. இந்த பணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
The post நெரூர் காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோரைப் பயிர் சாகுபடி appeared first on Dinakaran.