நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு கருத்தரங்கு மாணவர்கள் பங்கேற்பு

3 months ago 20

 

திருத்துறைப்பூண்டி, அக். 5: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் நெடும்லம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு மாலை நேரங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். முன்னதாக நாட்டு நல பணித்திட்ட அலுவலரும் முதுகலை ஆசிரியருமான சோமநாதன் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக அரசு சித்த மருத்துவர் அனுஷா கலந்து கொண்டார். ஆரோக்கிய வாழ்வு என்ற தலைப்பில் மாணவர்களுக்கிடையே உரையாற்றினார். உணவே மருந்து, உணவு உண்ணும் முறை, உணவு உண்ணும் கால இடைவெளி, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சுத்தம், சுகாதார பழக்க வழக்கங்கள், சித்த மருத்துவ குறிப்புகள் ஆகியவற்றை வழங்கினார். நிறைவில் ஆய்வக உதவியாளர் முருகவேல் நன்றி கூறினார்.

The post நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆரோக்கிய வாழ்வு கருத்தரங்கு மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article