சென்னை: சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், சாலைப்பணிகளின் முன்னேற்றம் குறித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அவர் கூறியதாவது: சாலைகளின் இரண்டு புறமும் வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். சாலைப் பணிகளில் குறைபாடு இருந்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிலஎடுப்பு பணிகளில் காலதாமதம் ஏற்படும்போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், மாவட்ட ஆட்சியர்களின் கவனத்திற்கும் கொண்டுச் செல்ல வேண்டும். 2021-2022ம் ஆண்டில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகள் இதுவரை முடிக்கப்படாத பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில சாலைப் பணிகளில் இன்னும் 40% சதவீதம் வரை முடிக்கப்படாமல் உள்ளதால் இப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். CRIDP திட்டத்தின்கீழ் மேற்கொள்ளபட வேண்டிய பணிகளில் நிலுவையிலுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பொறியாளர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பருக்குள் நிலுவையிலுள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post நெடுஞ்சாலைத்துறை நிலுவை பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: பொறியாளர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.