நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பீட்டை தமிழில் தயாரிக்க கோரி வழக்கு

2 days ago 4

சென்னை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாரிமுத்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்‘ தமிழகத்தின் அலுவல் மொழியான தமிழ் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகள் தமிழில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, இந்த திட்ட மதிப்பீடுகளை தமிழில் தயாரிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இதுதொடர்பாக 2023 ஜூன் மாதம் அரசுக்கு விண்ணப்பம் அளித்தும் அதன் மீது நடவடிக்கை இல்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியும் கடந்த 19 மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கையை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

The post நெடுஞ்சாலைத்துறை திட்ட மதிப்பீட்டை தமிழில் தயாரிக்க கோரி வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article