சென்னை: நான் முதல்வன் திட்டத்தால் ஜப்பானுக்கு சென்று பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு அங்கேயே பெறும் ஊதியத்தில் வேலையும் பிரபல பல்கலை கழகத்தில் கல்வி உதவி தொகையுடன் மேற்படிப்புக்காக வாய்ப்பும் கிடைத்துள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலமே இது சாத்தியமானதாக மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர். கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் நான் முதல்வன் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்திற்கு இன்டெர்ன்ஷிப் பயிற்சிக்காக ஒரு குழுவினரும் கியோட்டோ நிறுவனத்திற்கு உயிரியல் துறை ஆராய்ச்சி பயிற்சிக்காக மற்றொரு குழுவாகவும் கல்லூரி மாணவிகள் 10 பேர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பயிற்சி பெற்ற மாணவிகள் அங்குள்ள நவீன தொழில்நுட்பங்கள், ஆய்வுகள், தொழில் முறைகள் குறித்தும் கற்றறிந்தனர்.
தொடர்ந்து இன்டெர்ன்ஷிப் பயிற்சியை நிறைவு செய்து தாயகம் திரும்பிய அவர்கள் துணை முதலமைச்சர் உதயநிதியை சந்தித்து அங்கு கிடைத்த கல்வி சார்ந்த அனுபவத்தை பகிர்ந்தனர். இதனிடையே நெக்ஸ்ட் ஜென் நிறுவனம் 5 மாணவிகளுக்கு அதே நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.21 லட்சத்துக்கு வேலை வாய்ப்பும் கியோட்டோ பல்கலைகழகம் 4 மாணவிகளுக்கு முழு கல்வி உதவி தொகையுடன் மேற்படிப்பிற்காக வாய்ப்பையும் வழங்கி உள்ளது.
The post நெக்ஸ்ட் ஜென் நிறுவனத்தில் இன்டர்ன்ஷிப் முடித்த மாணவிகளுக்கு பணி: நான் முதல்வன் திட்டத்தால் ஜப்பானில் வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.