‘நீா் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பம்: கழிவுநீர் மேலாண்மை குறித்து கருத்து தெரிவிக்கலாம்

3 months ago 16

சென்னை: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 'நீா் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதியை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்வது மற்றும் கழிவுநீரை முழுமையாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை அகற்றுவதற்கான உள்கட்டமைப்பை சிறப்பாக கையாளும் மாநகருக்கு ‘நீா் பிளஸ்’ (Water +) எனும் தரச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

Read Entire Article