நீலகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்

2 months ago 11

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வேலூரைத் தொடர்ந்து நீலகிரியிலும் பள்ளி செல்லும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்.

நீலகிரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை கடத்திச் சென்று 7 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வேலூர் அருகே 13 வயது சிறுமி போதைக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி அருகே நடைபெற்றிருக்கும் மற்றொரு பாலியல் கொடுமைச் சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதையே வெளிப்படுத்துகிறது.

தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவியிருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்தவோ, அடியோடு ஒழிக்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, போதைப் பொருட்களை தமிழக எல்லைக்குள் வரவிடாமல் தடுப்பதற்காக தற்போது மேற்கொள்ளும் ஒத்திகை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல அமைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, வேலூர் மற்றும் நீலகிரியில் பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் யாராக இருந்தாலும் எந்தவித பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலூரைத் தொடர்ந்து நீலகிரியிலும் பள்ளி செல்லும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் குற்றச்சம்பவங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்.

நீலகிரி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி…

— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 22, 2024

Read Entire Article