உதகை: நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மலை ரயில் பாதையில் மரம் விழுந்ததால், உதகை - குன்னூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த வாரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு, வெயிலான காலநிலை நிலவியது. இந்நிலையில், இன்று (டிச.12) மீண்டும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காலை முதலே கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை தீவிரமடைந்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.