நீலகிரி மாவட்டத்தில் 18,750 மரக்கன்றுகள் நடவு பணி துவக்கம்

1 month ago 8

 

ஊட்டி, அக். 7: நீலகிரி மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் 18 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். இப்பணிகளை கலெக்டர் துவக்கி வைத்தார். ஊட்டி அருகே மசினகுடி ஊராட்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய வளாகத்தில், “பசுமை தமிழ்நாடு இயக்கம்” திட்டத்தின் கீழ் சார்பில், மரக்கன்றுகள் நடும் பணிகள் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து மரக்கன்றுகள் நடவு செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கலெக்டர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டமானது, ஊட்டி, குந்தா, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் பந்தலூர் வட்டங்களில் தலா 200 மரக்கன்றுகள் வீதம் 1200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.  வேளாண் பொறியியல்துறை சார்பில், 250 மரக்கன்றுகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் 400 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 850 மரக்கன்றுகளும், ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளின் சார்பில் தலா 1000 மரக்கன்றுகளும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 150 மரக்கன்றுகளும், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 150 மரக்கன்றுகளும்,

மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளின் சார்பில் 4125 மரக்கன்றுகளும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 125 மரக்கன்றுகளும், வனத்துறையின் சார்பில் 7500 மரக்கன்றுகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது’’ என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஊட்டி ஆர்டிஓ மகராஜ், வட்டாட்சியர் சரவணகுமார், வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் 18,750 மரக்கன்றுகள் நடவு பணி துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article