சென்னை: மத்திய அரசு 2024-25ம் ஆண்டில் தமிழகத்தில் 400 கோடி யூனிட் நீர்மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்த நிலையில், அதை விட கூடுதலாக 80 கோடி யூனிட் மின்சாரம் கூடுதலாக தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்துள்ளது.
தமிழக மின்வாரியத்துக்கு கோவை, ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள் உள்ளன. இதில், ஒரு யூனிட் மின்னுற்பத்தி செய்ய செலவு சராசரியாக 75 காசாக உள்ளது. இருப்பினும், போதிய மழை இல்லாததால் தினமும் சராசரியாக 750 முதல் ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.