நீர்நிலைகளை பராமரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

1 month ago 6

 

திருப்புவனம்,அக்.14: திருப்புவனம் நெல்முடிக்கரை பெரிய கண்மாய் கரையில் பாரம்பரிய முறைப்படி நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும் என தன் பவுண்டேசன், வயலகம், களஞ்சியம் தன்னார்வ நிறுவனங்கள் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் கண்மாய்கரை அதிகமுடைய அய்யனார் கோவில் வளாகத்தில் நடந்தது. தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர் வேதாசலம் பேசுகையில், ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சங்கிலித் தொடர் குளங்களை மக்கள் உருவாக்கி உள்ளனர். ஒருகுளம் நிறைந்த பின்னர் மிகுதியாகி வெளியேறும் தண்ணீர் அடுத்துள்ள குளங்களுக்கு சென்று நிரம்பும்படி நீர்நிலைகளை அமைத்து பராமரித்துள்ளனர்.

திருப்புவனம் நெல்முடிகரை கண்மாய் ‘ராஜ சிங்ககுளம்’ என அழைக்கப்பட்டதாக கல்மடையில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்மாய்களை விவசாயிகள் தான் பராமரிக்க முன் வரவேண்டும் என்றார். கூட்டத்தில் பூர்வீக வைகை பாசன சங்க தலைவர் ஆதிமூலம், கணநாதன், கண்மாய் பாசன விவசாயிகள் ஈஸ்வரன், பிரபாகரன், குருசங்கர், பழனியாண்டி, ராஜாமணி வரலாற்று ஆய்வாளர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

The post நீர்நிலைகளை பராமரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article