மதுரை: நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பழைய விளாங்குடி அதிமுக பகுதி செயலாளர் சித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "அதிமுக சார்பில் மதுரை-திண்டுக்கல் சாலையில் விளாங்குடியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு திறந்துவைத்தார்.