நீதிபதிக்கு எதிரான அறிவிப்பில் அதிமுக நழுவிக் கொண்டது ஏன்? மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம்

4 months ago 12

சென்னை: நீதிபதிக்கு எதிரான அறிவிப்பில் அதிமுக அமைதி காப்பது ஏன் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த 8ம் தேதி உத்திரப்பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். குதிரை கீழே தள்ளியதுடன் நில்லாமல் குழியும் பறித்தது என்பது போல், சட்டவிதிகளை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்வில் கலந்து கொண்ட நீதிபதி சேகர் குமார் யாதவ், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக விஷம் கக்கும் வெறுப்பு பேச்சு பேசியுள்ளார்.

அவரது பேச்சு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நீதிபதியாக பொறுப்பேற்கும் போது எடுத்துக் கொண்ட சத்திய பிரமாணத்திற்கு விரோதமானது. நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் கேடு விளைவித்து, இறையாண்மைக்கு ஊறு செய்யும் தேச விரோதச் செயலாகும்.பாஜவோடு கூட்டணி இல்லை எனில், நீதிபதியின் வகுப்புவாத வெறுப்பேற்றும், மதவெறி வன்ம பேச்சை கண்டித்து, மாநிலங்களவை உறுப்பினர்கள் 55 பேர் கையெழுத்திட்டு மாநிலங்களவை செயலாளரிடம் கொடுத்துள்ள அறிவிப்பு கடிதத்தில் அதிமுக உறுப்பினர்கள் கையெழுத்துப் போடாமல் நழுவிக்கொண்டது ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு அதிமுக விளக்க வேண்டும்.

The post நீதிபதிக்கு எதிரான அறிவிப்பில் அதிமுக நழுவிக் கொண்டது ஏன்? மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article