சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.