நீட் தேர்வு முறைகேடு பீகாரில் 2 பேர் கைது

3 hours ago 2

பாட்னா: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 4ஆம் தேதி நடந்த நீட் தேர்விலும் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. போலி ஹால் டிக்கெட் தயாரித்து பீகாரில் நடந்த நீட் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூரில் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேகுசராய் மாவட்ட சிறையில் பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் உட்பட இரண்டு பேர், நீட் நுழைவுச் சீட்டுகளை போலியாக தயாரித்து மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பதில் போலி மாணவர்களை தேர்வு எழுத வைத்ததற்காக சமஸ்திபூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு பதில், போலியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர்.

 

The post நீட் தேர்வு முறைகேடு பீகாரில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article