நீ​தித்​துறை மீதான நம்பிக்கையை காக்க ஊழலை ஊக்கு​விக்​காதீர்கள்: தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை

2 months ago 7

சென்னை: நீதித்​துறை மீது மக்கள் வைத்​துள்ள நம்பிக்கையை காப்​பாற்ற, ஊழலை ஒருபோதும் ஊக்கு​விக்​காதீர்கள் என இளம் வழக்​கறிஞர்​களுக்கு உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீராம் அறிவுரை வழங்​கினார். தமிழ்​நாடு மற்றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் சார்​பில் அரசி​யலமைப்பு சட்டதின விழா மற்றும் 1,200 புதிய வழக்​கறிஞர்கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்​யும் நிகழ்வு, சென்னை உயர் நீதி​மன்ற கலையரங்​கில் நேற்று மாலை நடைபெற்​றது.

இந்நிகழ்​வில் பார் கவுன்​சில் தலைவர் பி.எஸ்​.அமல்​ராஜ் வரவேற்​றார். புதிய வழக்​கறிஞர்​களாக பதிவு செய்​யும் நிகழ்வை வழக்​கறிஞர் ஜாகிர் ஹூசைன் தொடங்கி வைக்க, என்ரோல் ​மெண்ட் கமிட்டி தலைவர் வழக்​கறிஞர் கே.பாலு இளம் வழக்​கறிஞர்​களுக்கான உறுதி​மொழியை வாசித்தார்.

Read Entire Article